தூத்துக்குடியில் இருந்து வேளாங்கண்ணிக்கு காரில் 11 பேர் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் சென்ற கார் மல்லிப்பட்டினம் மனோரா அருகில் அதிகாலை 5 மணிக்கு வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாக்கியராஜ், ஞானம்மாள், ராணி, சின்னபாண்டி, நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த
மரிய செல்வராஜ், பாத்திமா மேரி, சந்தோஷ் செல்வம், சரஸ்வதி, கணபதி, லதா,
சண்முகத்தாய், பாக்கியராஜ், ஞானம்மாள், ராணி, சின்னபாண்டி, ஆகிய ஏழு
பேருக்கும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதல் உதவி வழங்கப்பட்டு
தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து சேதுபாவா சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரணை மேற்கொண்டுள்ளனர்.









Post a Comment