பட்டுக்கோட்டை சின்னையா தெருவில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றங்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த நீதி மன்றத்தில் பட்டுக்கோட்டை நகரம் பட்டுக்கோட்டை தாலுகா, அதிராம்பட்டினம், மதுக்கூர், அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட அனைத்து வழக்குகளும் நடந்து வருகிறது.
இந்நிலையில் புதிதாக மகிளா நீதிமன்றம். கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றங்கள் வர இருப்பதாலும் நீதிமன்றம் செயல்பட்டு வரும் இடம் நகரின் மையப் பகுதி என்பதால் கோர்ட் செயல்பாடுகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் வேறு இடத்தில் புதிதாக நீதிமன்ற வளாகம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த இடத்தை தேர்வு செய்வதற்காக சென்னை ஐகோர்ட்நீதிபதி கார்த்திகேயன் பட்டுக்கோட்டையில் நரியம்பாளையம், மற்றும் முத்துப்பேட்டை சாலையில் மண் டல ஊரக வளர்ச்சி நிறுவனத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுகுறித்து ஆட்சியர் மூலம் திட்ட அறிக்கை வைத்து அரசின் உரிய அனுமதி பெற்று புதிய நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆர்டிஒ ஜெயஸ்ரீ, தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவர் வேலு கார்த்திகேயன், நீதிபதிகள், வக்கீல் சங்கத்தினர் மற்றும் அலுவலர்கள் இருந்தனர். உடன் இருந்தனர்.

Post a Comment