மனோரா கடற்கரை,டெல்டா பீச் சீரமைக்க கோரிக்கை வைத்த சட்டமன்ற உறுப்பினர்,கோரிக்கையை ஏற்ற டெல்டா அமைச்சர்.!

 



தஞ்சை மாவட்டம்,பேராவூரணி தொகுதிக்கு உட்பட்ட சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மனோரா கடற்கரையையும்,புதுப்பட்டினம் ஊராட்சி டெல்டா பீச்சையும் சீரமைக்க டெல்டா பகுதியின் அமைச்சரான தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அவர்களை சந்தித்து பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார்,சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கம்,ழ அறக்கட்டளை அமைப்பின் நிறுவனரும்,கல்வி வழிகாட்டியுமான கார்க்கி அசோக் குமார் ஆகியோர் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமைச்சர்  அதற்கான பணிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.


Post a Comment

Previous Post Next Post