தஞ்சைக்கு எடப்பாடி பழனிசாமி வருகை~ மாவட்ட செயலாளர் அழைப்பு.!

 



தஞ்சை தெற்கு மாவட்ட அ. தி. மு. க. செயலாளரும், முன்னாள் எம். எல். ஏ. வுமான சி. வி. சேகர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,


காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், காவிரி நதிநீரை உரிய நேரத்தில் டெல்டா விவசாயிகளுக்கு பெற்றுத் தராத மத்திய- மாநில அரசுகளை கண்டித்தும் தஞ்சை திலகர் திடலில் அ. தி. மு. க. சார்பில் இன்று வியாழக்கிழமை மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது. இதில் தமிழக முன்னாள் முதல்- அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.
ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட நகர, ஒன்றிய, பேரூர் கழக அ. தி. மு. க. நிர்வாகிகள், அனைத்து அணியின் கட்சிபொறுப்பாளர்கள் உள்பட ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post