தஞ்சாவூர் மாவட்டம், புதுப்பட்டினம் ஊராட்சியை தாலுக்காவாக மாற வாய்ப்புள்ள அதிராம்பட்டினத்தோடு பட்டுக்கோட்டை தாலுக்காவில் இருந்து பிரித்து இணைக்க வேண்டி புதுப்பட்டினம் விவசாய சங்க பிரதிநிதிகள் வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து மனு அளித்தனர். மேலும் புதுப்பட்டினம் ஊராட்சிக்கென தனி கிராம நிர்வாக அலுவலரையும் நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
புதுப்பட்டினம் ஊராட்சி விவசாய சங்கத் தலைவர் பி.ரெங்கசாமி,செயலாளர். எம்.நெய்னா முகம்மது. முன்னாள் ஊராட்சிமன்றதலைவர் கே.ராமசாமி,கே.அப்பாசாமி, ஆசிரியர், ஏ.ஹாஜா அலாவுதீன் ஆகியோர் அவர்களிடம் மனு இணைந்து மனு அளித்தனர்.
நன்றி: அதிரை நிழல்

Post a Comment