திண்டுக்கல் தொகுதியில் எஸ்டிபிஐ கட்சி போட்டி.?




 மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து இன்று காலை 10 மணிக்கு இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. அண்மையில் திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணிகளை உறுதிப்படுத்தி தொகுதி பங்கீடு இறுதி செய்து வருகின்றன.  வேட்புமனு தாக்கல் இன்று ( மார்ச் - 20 ) முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கூட்டணி குறித்து அதிமுக இன்று காலை 10 மணிக்கு இறுதி முடிவு எடுக்கவுள்ளதாக அக்கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது.

சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் எஸ்.டி.பி.ஐ.  கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு எஸ்.டி.பி. ஐ கட்சி தலைவருக்கு அதிமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியை அதிமுக ஒதுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post