கார் கண்ணாடியை உடைத்து திருட்டு- இருவர் கைது.!




 தஞ்சை மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனி பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவருடைய மகன் அப்துல்வஹாப்(வயது 32). இவர் சொந்தமாக கண் கண்ணாடி கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் செல்போன்களை மொத்தமாக விலைக்கு வாங்கி விற்பனையும் செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் ஆர்.ஆர். நகர் பகுதியில் உள்ள தனது கண் கண்ணாடி கடைக்கு காரில் வந்தார். இதையடுத்து காரை கடை முன்பு நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுவிட்டார்.


பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு காருக்குள் வைத்திருந்த 8 செல்போன்கள் மற்றும் ரூ. 17 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அப்துல்வஹாப் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள புங்கனூர் பகுதியைச் சேர்ந்த கிரிநாதன் (47), திருச்சி அம்பிகாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ்(38) ஆகியோர் என்பதும், செல்போன்கள் மற்றும். பணத்தை திருடியதும் தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்ப யதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து செல்போன்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Post a Comment

Previous Post Next Post