தஞ்சை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் யாருமே எதிர்பார்க்காத டுவிஸ்ட் கொடுத்த திமுக தலைமை, வேட்பாளர் யார்.?

 



யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்டை திமுக தலைமை ஏற்படுத்தி இருக்கிறது தஞ்சை தொகுதிக்கு.தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் அதிக முறை எம்பியாக இருந்த பழணிமானிக்கத்திற்கு சீட் வழங்கப்படாமல் புதிய அறிமுகமாக முரசொலிக்கு திமுக தலைமை நாடாளுமன்ற சீட் வழங்கி இருக்கிறது.


கட்சி உடன்பிறப்புகளாளும்,ஊடகங்களாலும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட தஞ்சை மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதிக்கும் சீட் வழங்கப்படவில்லை.இப்படி யாருமே எதிர்ப்பார்க்காத வேட்பாளர் முரசொலி யார்.?

தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளரின் விவரம்:-

பெயர்  - ச.முரசொலி B.Sc, L.L.B

தந்தை பெயர் - கே.சண்முகசுந்தரம்

தாய் - தர்மசமத்தினி

மனைவி - எஸ்.பொற்செல்வி

மகன் -  எஸ்.ஆதவன்

தஞ்சாவூர் மாவட்டம் , தஞ்சாவூர் வட்டம், திருவையாறு சட்டமன்ற தொகுதி, தென்னங்குடி கிராமத்தில் எஸ்.கந்தசாமி அவர்களின் பேரனும் கே.சண்முகசுந்தரம்- தர்மசமத்தினி தம்பதியினரின் மூன்றாவது மகனாக 26.06.1978 ல் பிறந்தார். இவருடைய தாத்தா தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியில் இயக்குநராக இருந்தவர், இவரது தந்தை 1971-ம் ஆண்டு ஊராட்சி மன்ற தலைவராகவும் , தென்னங்குடி தொடக்க வேளாண்மை சங்க தலைவர் பதவி வகித்தவர். 

இவர் இயற்பியல் இளங்கலை பட்ட படிப்பை தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியிலும் , இளங்கலை சட்ட படிப்பை பெங்களூர் ராம் மனோகர் லோகியா சட்ட பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளார்.

இவர் 2004 முதல் தென்னங்குடி ஊராட்சி பிரதிநிதியாகவும், 2006 – 2011 வரை தஞ்சாவூர் ஒன்றியக்குழு உறுப்பினராகவும், 2014 - 2020 வரை தி.மு.க பொதுக்குழு உறுப்பினராகவும், 2020  தஞ்சை வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு. 2022 ல் நடைபெற்ற தி.மு.க வின் 15 வது அமைப்பு தேர்தலில் தஞ்சை வடக்கு ஒன்றிய கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


Post a Comment

Previous Post Next Post