தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ரூ. 3 லட்சம் வரை எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என
தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தமிழ்நாடு தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் முகமது இப்ராஹிம் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர் களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படை அமைத்தல் கண்காணிப்பு பணிநடந்து வருகிறது. ரூ. 50 ஆயிரத்திற்கும் உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து சென்றால் அவைப் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் , சிறுகுறு வியாபாரிகள், தரைக்கடை வியாபாரிகள் தங்களது தொழில் சம்பந்தமாக ஆவணங்கள் இல்லையென்றாலும் குறைந்தது ரூ. 2 அல்லது 3 லட்சம் எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment