மீனவர்களின் வலையில் சிக்கிய டைகர் இறால்.!

 



அதிராம்பட்டினம் பகுதியில் மீனவர் வலையில் சீசன் மாறி சிக்கிய டைகர் இறால் கிலோ ரூ. 450-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடலோர பகுதிகளான கரையூர் தெரு, காந்திநகர், ஆறுமுகக் கிட்டங்கிதெரு, ஏரிப் புறக்கரை, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றனர். இந்த நிலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் வலையில் டைகர் இறால் சிக்கியது. இந்த இறால் அதிராம்பட்டினம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே கிலோ ரூ. 600-க்கு விற்பனையானது.

டைகர் வகையான இறால் அதிராம்பட்டினம் அலையாத்திக்காடு பகுதிகளில் மழைக்காலங்களில் கடல் நீரும், மழை நீரும் சேரும் இடத்தில் இனப்பெருக்கம் செய்யும். அதாவது அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் டைகர் இறால் மீனவர்கள் வலையில் சிக்கும். ஆனால் இந்த ஆண்டு ஒரு டைகர் இறால் கூட மீனவர்கள் வலையில் சிக்கவில்லை. தற்போது சீசன் மாறி மார்ச் மாதத்தில் ஒரு மீனவர் வலையில் 5 கிலோ டைகர் இறால் சிக்கியுள்ளது

Post a Comment

Previous Post Next Post