மீனவர்களின் நலன் சார்ந்த கோரிக்கை நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம் ஒப்படைப்பு.!



 தஞ்சை வடக்கு, மத்திய, தெற்கு, நாகை வடக்கு,தெற்கு ,மற்றும் மயிலாடுதுறை மாவட்ட திமுக சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்து கேட்பு கூட்டம் தஞ்சாவூரில் மார்ச்.2 மாலை 4 மணி அளவில் நடைபெற்றது.

திமுக கருத்துக்கேட்பு கூட்டத்தில் மீனவர்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளையும்,நமது பகுதிகளுக்கு தேவையான கோரிக்கைகளையும் முன்னிறுத்தி கோரிக்கை மனுவினை தமிழ்நாடு மீனவர் நலவாரிய துணைத்தலைவர் தாஜூதீன்,முன்னாள் ஒன்றிய பெருந்துணைத்தலைவர் சேக் அப்துல்லா,மன்சூர் இலாஹீ ஆகியோர் நாடாளுமன்ற கருத்துக்கேட்பு குழுவிடம் வழங்கினர்.

இந்த கூட்டத்தில் TKS இளங்கோவன்,AKS விஜயன்,Dr எழிலன்,தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர்SS பழனி மாணிக்கம், சென்னை மேயர் பிரியா, ஆகியோர் கலந்து கொண்டு மணுக்களை பெற்றனர்.







Post a Comment

Previous Post Next Post