மல்லிப்பட்டிணத்தில் நம் பள்ளி,நம் பெருமை விழிப்புணர்வு பேரணி..!

 


தஞ்சை மாவட்டம், சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சி மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நம் பள்ளி, நம் பெருமை என்ற முழக்கத்துடன் அடங்கிய பதாகைகளை ஏந்தியும்,கோசங்களை எழுப்பியும்  அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைகளை அதிகப்படுத்தும் வண்ணம் மாணவ,மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களின் விழிப்புணர்வு பேரணி மல்லிப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய பகுதிகளில் நடைபெற்றது.

பேரணியில் பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள்,பள்ளி மேலாண்மை குழுவினர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அரசு பள்ளிகளில் படிப்பவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும்,சலுகைகளையும் தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.மேலும் மருத்துவ உள் ஒதுக்கீடுகளையும் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.









Post a Comment

Previous Post Next Post