தஞ்சை தெற்கு மாவட்டம் சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்,ஸ்டாலின் 71 வது பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் 3 ஆண்டு சாதனை மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க தெருமுனை பிரச்சாரம் இரண்டாம்புளிக்காட்டில் நடைபெற்றது.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் தலைமை உரை ஆற்றினார்.சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளரும்,சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கம் வரவேற்பு உரையாற்றினார்.
திமுக தலைமை கழக பேச்சாளர் கலைமணி இளைய பாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்,மேலும் பேராவூரணி தொகுதி பொறுப்பாளர் நாகை மனோகர், பொதுக்குழு உறுப்பினர் தனபால், மாவட்ட விவசாய பணி அமைப்பாளர் அருள் நம்பி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும் மாவட்ட மீனவர் அணி தலைவர் அபுதாஹிர் கலந்துக்கொண்டார். இக்கூட்டத்தில் திராவிட திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.







Post a Comment