திமுகவிடம் ஒரு தொகுதி கேட்கும் மமக.!

 



சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ,அவர்கள் தலைமையில் சந்தித்தனர்.

இந்நிகழ்வில் துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப், தலைமை நிலையச் செயலாளர் ஜைனுல்ஆபிதீன்,மமக மாநில அமைப்புச்செயலாளர்கள் மாயவரம் அமீன், புதுமடம்ஹலீம், மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா ஆகியோர் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்..

பின்பு செய்தியாளர்களிடம்  சந்திப்பில் “ஒரு தொகுதியை ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளோம்"

"மக்களவைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு, ஒரு தொகுதியை வழங்க வேண்டும் என்று அழுத்தமான கோரிக்கை வைத்துள்ளோம்.

எந்த தொகுதியாக இருந்தாலும் போட்டியிட தயாராக உள்ளோம் இந்தியா முழுவதும் ஒரு எடுத்துக்காட்டான கூட்டணி, திமுக தலைமையில் தமிழ்நாட்டில் அமைய உள்ளது"முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA பேட்டி




Post a Comment

Previous Post Next Post