தமிழகத்தில் அடுத்தடுத்து வெப்பஅலை மே 15ம் தேதி வரை தொடரும்.!

 


தமிழகத்தில் அடுத்தடுத்து வெப்பஅலை மே 15ம் தேதி வரை வீசக்கூடும்.


==> தமிழகத்தின் உட்புற சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 42.5°© அளவிற்கு பதிவாகியுள்ளது.


==> அடுத்து வரக்கூடிய தினங்களில் உட்புற தமிழகத்தில் அதிகட்ச வெப்பநிலை 39° முதல் 43°© வரை பதிவாக கூடும். கடலோர பகுதிகளில் வெப்பநிலை 36° முதல் 39°©  வரை பதிவாகும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் 30°© வரை அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்.


==> வறண்ட வானிலையுடன் வெப்பமான சூழலும், வெப்பமான வறண்ட காற்று பகலில் வீசி அசௌகரியத்தை ஏற்படுத்தும். 


இந்த நிலை மே 15ம் தேதி வரை தமிழகத்தில் நீடிக்கும்.


1. முற்பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்/ தொலைதூர பயணங்களை தவிர்க்கவும்.


2. விவசாயிகள் வேளாண்மை பணிகளை முற்பகல் அல்லது மாலை நேரத்தில் மேற்கொள்ளவும்.


3. திறந்தவெளியில் வேலை பார்ப்பவர்கள் பிற்பகல் 12 மணி முதல் 3 வரை திறந்தவெளியில் வேலைப்பார்ப்பதை தவிர்க்கவும்.


4. கால்நடைகள் நிழலான இடத்தில் இருப்பதை உறுதிசெய்யவும், அவ்வப்போது தேவையான நீரை வைக்கவும்.


5. ஐரோப்பியா, அமெரிக்க, கனடா போன்ற நாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் மே 15 ம் தேதி வரை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.


என்றும் இயற்கையுடன்

டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர்



Post a Comment

Previous Post Next Post