கோடை வெயில் தாக்கம், செத்து மிதக்கும் மீன்கள்..!

 


தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் சில நாட்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.

இந்த வெயிலால் ஏரி, குளங்களில் தண்ணீர் வற்றி வறண்டு வருகின்றன.

அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளும் வேகமாக வறண்டு வருகின்றன. ஏரிப்புறக்கரை உப்பளங்களுக்கு செல்லும் சாலை ஓரத்தில் உள்ள வாய்க்காலில் கடல்நீர் பெருக்கெடுத்தாலும் மற்றும் மழை பெய்தாலும் இந்த வாயக்காலில் எந்த நேரமும் தண்ணீர் இருக்கும். தற்போது வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால், உப்பள வாய்க்காலில் தண்ணீர் பச்சை நிறமாக மாறி அதில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன.

இது பற்றி மீனவர்கள் கூறுகையில் இந்த வாய்க்காலில் உப்பு உற்பத்தி செய்வதற்கு கடலில் இருந்து நீர்வரவழைக்கும் வாய்க்காலாக உள்ளது. இந்த வாய்க்காலில் அதிக அளவில் மீன்கள் உற்பத்தியாகும். அப்படி இருக்கும்பட்சத்தில் தரைப்பகுதியில் இருந்து வீச்சு வலை வீசி மீன் பிடிக்கும் மீனவர்கள் இந்த வாய்க்காலை நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வாய்க்கால் நீரின் தட்பவெப்பநிலை மாறுகிறது. அதற்கு ஈடுகொடுக்க முடியாமல், நீர்நிலைகள் பச்சை நிறத்தில் மாறி மீன்கள் செத்து மிதக்கின்றன. மறுபக்கம் வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் வறண்ட நிலையில் காணப்படுவதோடு சின்ன மீன்களும் செத்து மிதக்கின்றன

Post a Comment

Previous Post Next Post