தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் கூட்டறவு நியாய விலைக்கடையில் பொருட்களின் அளவுகள் குறைக்கப்பட்டு கொடுப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் மண்ணெண்ணை கடந்த மாதம் வரை 500 மில்லி வரை வழங்கப்பட்ட நிலையில் இந்த மாதம் 200 மில்லி மட்டுமே வழங்கப்பட்டது,இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்,இதுகுறித்து நியாய விலை கடை ஊழியரிடம் கேட்கையில் 800க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் இருக்கும் நிலையில் குறைவான அளவே மண்ணெண்ணை வழங்குவதாகவும் தெரிவித்தார்,இம்முறை 40லி மட்டுமே வழங்கபட்டது என்றும் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பொதுமக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.மேலும் மாதம் ஒருமுறை மட்டுமே வழங்கப்படுவதாகவும்,இதனை மூன்று முறை வழங்குவதற்கு பரிந்துரை செய்திடவும் கோரினர்.கைரேகை பதிவு செய்யும் இயந்திரத்தில் கைரேகை பதிவு செய்வதில் சிக்கலாக இருப்பதால் கைரேகை பதிவு இயந்திரத்தை மாற்றி தரவும் கோரிக்கை வைத்தனர்.

Post a Comment