ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் ஏப்ரல் 28 முதல் மே 4, 2024 வரையிலான வானிலை நிலவரங்களை வெளியிட்டுள்ளது.
அதில், இன்று முதல் புதன்கிழமை வரை வெப்பசலமான மேகங்கள் உருவாகி உள்பகுதி மற்றும் மேற்கு பகுதிகளில் ஆலங்கட்டி மழை பொழிய வாய்ப்புள்ளதாகவும், புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஒரு சில இடங்களில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழை பொழிய வாய்ப்புள்ளதாகவும், வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை தெற்கு மற்றும் கிழக்கில் லேசான முதல் மிதமான மழை பொழிந்து பின் வானிலை படிப்படியாக குறையும் என தெரிவித்துள்ளது.
மேலும், குறிப்பாக வெப்பசலமான மேகங்கள் உருவாக்கும் போது தூசி மற்றும் மணல் கலந்து காற்று வீசும் என தெரிவித்துள்ளது.
நிலையற்ற வானிலை இருப்பதால் வாகன ஓட்டிகள் மிக எச்சரிக்கையாக இருக்கவும்.
%20(6).jpeg)
Post a Comment