அமீரகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையானது மிக
அதிக அளவு பெய்ததாகவும் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இரண்டு நாட்களாக
மழை கொட்டி தீர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது அமீரகத்தில்
1949 ஆம் ஆண்டு மழைக்கான தரவு சேகரிப்பு தொடங்கியதிலிருந்து பதிவு
செய்யப்பட்ட மழைப்பொழிவு விஞ்சி அதிக மழைப்பொழிவை தற்போது அமீரகம் பதிவு
செய்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக அல் அய்ன் பகுதியில் 24 மணி நேரத்திற்குள் 254 மில்லி மீட்டர் மழைபொழிவை
வானிலை துறை பதிவு செய்துள்ளது. இதற்கு முன்பு மார்ச் 9 2016 அன்று ஷுவைப் நிலையத்தில் ஒரே நாளில் 287.6 மில்லி மீட்டர் பதிவானதாக தேசிய வானிலை ஆய்வு
மையம் என்எம்சி தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் அமீரகம் முழுதும் பெய்த
மழையை ஒப்பிடுகையில் கடந்த இரு நாட்களாக பெய்த மழை இதுவரை இல்லாத
அளவிற்கு அதிகபட்ச மழையென தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கதாகும்.
ஐக்கிய
அரபு அமீரகத்தில் இந்த கனமழை ஒரு விதிவிலக்கான நிகழ்வு என்றும் மேலும்
தொடர்ந்து அதிக அளவு மழை பதிவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 16 செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி வரை கடந்த 24 மணி
நேரத்தில் நாட்டில் பெய்த மழை இதுவரை அமீரகத்தில் பதிவான மழைப்பொழிவு
விட அதிகமாகும் என கூறப்பட்டுள்ளது.
மேலும்
இது அரபு அமீரகத்தின் ஆண்டு மழை சராசரி அளவை அதிகரிக்க பங்களிப்பத்துடன்
நாட்டு நிலத்தடி நீர் இருப்புகளை வலுப்படுத்தும் என்று வானிலை அறிஞர்கள்
தெரிவித்துள்ளனர்
முன்னதாக
வெளியான வானிலை அறிவிப்பின் படி திங்கட்கிழமை ஆரம்பித்த கனமழை செவ்வாய்
என்ற தீவிரமடைந்த அமீரகத்தை புரட்டிப் போட்டதுடன் அமீரக குடியிருப்பாளர்களை
பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக்கி உள்ளது. நேற்று இரண்டு அலைகளாக பெய்த
கனமழையால் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.
தற்போது
வரை பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிவாமல் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது
மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாது சூழல் ஏற்பட்டு மக்களின் இயல்பு
வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Post a Comment