பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பத்மாவதி (54). இவரது கணவர் சம்பத் இவர் தன் வீட்டுக்கு அருகிலேயே விறகு கடை நடத்தி வருகிறார். செவ்வாய்க்கிழமை அதிகாலை 3. 30 மணி அளவில் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். வெயில் காலம் என்பதால் கதவை பூட்டாமல் சாத்தி வைத்து விட்டு தூங்கியதாக சொல்லப்படுகிறது. அப்போது விறகு கடை வழியாக வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் பத்மாவதி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்து சென்று விட்டார். விழித்துக்கொண்டு பத்மாவதி சத்தம் போட்டதும் அவரது கணவர் விரட்டியபோதும் திருடனை பிடிக்க முடியவில்லை. இதுபற்றி மதுக்கூர் காவல்துறையினர் வழக்கு பதிந்து கண்காணிப்பு கேமராக்கள் பதிவை வைத்து ஆராய்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment