மீண்டு....வா. மழையே,.. மீண்டும்...வா. திரண்டு வா..~ மல்லி மறுமலர்ச்சி இதழ்.!

 


வஞ்சித்த வெயில் வாட்டிக் கொண்டு ,நம் மல்லியில் மிஞ்சித் தவித்த நேரம், நாம் இறையைக் கெஞ்சியதும், இன்று நம்மைக் கொஞ்சித் தழுவியது மெல்லிய பூங்காற்று

தழுவிய காற்று ,மேகங்கள் புடை சூழ திரட்டிய தூசிகள் கண்ணில் விழுந்தாலும், ...ஏசியின் குளுமையை உணரச் செய்தது, நம் உள்ளம்......

கலங்கிய மழைச்சாரல் மண்ணில் விழ,, "மண் மணத்தது, "மழை"வாடையுடன்.., ஒரு கணம் கனத்தது என் மனம் களிப்பின் பிரார்த்தனையோடு,,

சிறு"ச்சாரலில்"நனைந்த ,என் தோட்டத்து வாழையும்,🌱 தென்னங்கிளையும்🌴, பளிச்சிடும் ஒளியில், பசுமை கண்டு ,,என் மீது விழுந்த மழைத்துளியே,...🫧 இத்தனை நாளாய் எங்கிருந்தாய், என்பது போல் ஜாடை காட்டி, பின்னிய ஜடை போல், அதன் அழகை ரசித்தேன்..

நிமிடத்துளியில், கள்ள🌫️ மேகங்கள் மெல்ல நகர்ந்து, திசை மாறும் விசையைக் கண்டு, அதிர்ச்சியடைந்தேன்..

ஓ ,..மழையே ,.மாரி" எனும் புனைப்பெயர் கொண்டதாலே,திசை மாறி விட்டாய்... நீ  இனி சாரி எனச் சொன்னாலும்,

என் இறைவனிடம் மீண்டும் மனுக் கோரி உனை வரிந்து கட்டி," சரி கட்டுவோம்...


🌌விண்ணில் சிறைபட்ட மழையே,  ⛈️  மரம்,🌴செடி🌲 ,கொடி, 🌾இன்னும் பிற உயிர்கள், இம்மல்லி மண்ணில் இறையருளால் ,துள்ளிப் பெருகட்டும்... உன் ச🌦️ல்லி விளையாட்டை அள்ளிக் கொடு.  .......⛈️

      "மீண்டும் வா...."மழையே,,. மீண்டு "வா"

                           "திரண்டு வா"......🫧🌦️....✍️..

 

                    அன்புடன் உங்கள்:-

         "மல்லி மறுமலர்ச்சி இதழ்"

         ஆக்கத்தின் ஊக்கம்.....✍️ 


Post a Comment

Previous Post Next Post