தஞ்சை மாவட்டத்திலே மிகப்பெரிய துறைமுகம் மல்லிப்பட்டினத்தில் உள்ளது.இங்கே சுற்றுவட்டாரத்திலிருந்தும்,தொலைவிலிருந்தும் உணவிற்காக கடல்சார்ந்த மீன்கள்,இறால்,நண்டு உள்ள வகைகளை அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.இதனால் மல்லிப்பட்டினத்தில் கடல்சார்ந்த தொழிலோடு இன்ன பிற தொழில்களும் அதாவது டீ,கூல்டிரிங்கஸ் சிறப்பாக வியாபரம் நடந்து வரும்.
இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்வதில்லை,வெளியூர்களுக்கு மீன்கள் ஏற்றுமதியாகுவதில்லை.
அப்படியிருக்கையில் மீன்கள் வாங்குவதற்கு பலரும் மல்லிப்பட்டினம் வந்து செல்கின்றனர்.இங்கே வந்து வாங்க கூடிய பொதுமக்கள் மகிழ்ச்சியாய் செல்லும் அளவிற்கு நல்ல விலையிலும்,தரமான,கெட்டுப்போகாத மீன்களையும் விற்பனை செய்வதன் நம்முடைய வியாபாரத்தையும்,ஊருக்கான வருமானத்தையும் ஈட்டிட முடியும்.
மேலும் தரமான,சரியான மீன்களை நாம் கொடுக்கும் போது நம்மை மீண்டும், மீண்டும் தேடிவருவார்கள்.
தரமற்ற மீன்களை விற்பனை செய்வதால் மீண்டும் வராமல் சென்றுவிடுவதால் பிறரின் வியாபரமும்,இன்ன பிற தொழில்களும் பதிப்படைந்து விடும், மீன்களின் தரத்தை,கெட்டு போன மீன்களை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவருவதை சங்கங்கள்,மீன் வியாபரிகள் தடுத்து தரமான மீன்களை வழங்கிட உறுதி செய்திட வேண்டும்.
%20(14).jpeg)
Post a Comment