கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை.!

 



கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக படர்ந்து கிடக்கும் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை உள்ள முக்கிய சாலையாக கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இதிலும் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் தம்பிக்கோட்டை வடகாடு துவங்கி புதுக்கோட்டை மாவட்ட எல்லையான கட்டுமாவடி வரை சுமார் 45 கிலோமீட்டர் தூரம் கொண்டது கிழக்கு கடற்கரைச் சாலை. இந்த சாலை வழியாக ராமேஸ்வரம் வேளாங்கண்ணி என முக்கிய சுற்றுலா தளங்கள் உள்ளன. இதன் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.

கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு புறமும் சீமை கருவேல மரங்கள் படர்ந்து கிடக்கின்றன. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை உள்ளது. மேலும் கனரக வாகனங்கள் வரும்போது இரு சக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்க முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே சாலை ஓரத்தில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்றி பொதுமக்கள் போக்குவரத்திற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post