பேராவூரணியில் அதிமுக தெற்கு ஒன்றியம் சார்பில், தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
தமிழகத்தில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தல் ஆங்காங்கே திறக்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின்படி, பேராவூரணி அண்ணா சிலை அருகே, அதிமுக தெற்கு ஒன்றியம் சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, அதிமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் சி. வி. சேகர் தலைமையேற்று நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். கழக விவசாய அணி துணைச் செயலாளர், முன்னாள் எம்எல்ஏ மா. கோவிந்தராசு, மாவட்ட அவைத்தலைவர் எஸ். வி. திருஞானசம்பந்தம், கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் மலை அய்யன், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் எஸ். ஆர். ஜவகர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய செயலாளர் கோவி. இளங்கோ வரவேற்றார். அதிமுக தெற்கு ஒன்றியக் கழகம் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கட்சியினர், 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள், பழங்கள், இளநீர், பனை நுங்கு, குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டன.

Post a Comment