தமுமுக-மமக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.!

 


தமுமுக&மமக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அதிரை நகர அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஃபவாஸ் தலைமையில் நடைபெற்றது. 

மாவட்ட துணை நிர்வாகிகள் நியமனம் சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டு, தமுமுக மமக மாவட்ட துனை தலைராக அதிரை இத்ரீஸ் அகமது அவர்களும், தமுமுக மாவட்ட துனை செயலாளர்கள் அதிரை நைனா முஹம்மது, மதுக்கூர் புரோஸ்கான் ஆகியோரும், மமக மாவட்ட துணை செயலாளராக அதிரை SMA சாகுல் ஹமீது,மதுக்கூர் Er.முஹம்மது இலியாஸ் ஆகியோர் மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டனர். 

மேலும் மாவட்ட அணி நிர்வாகங்கள் கிளை, நகர, பேரூர் கழகங்களின் பரிந்துரையின் அடிப்படையில் விரைவில் அமைப்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. 

இக்கூட்டத்தில் தமுமுக மாவட்ட செயலாளர் அதிரை அப்துல் மாலிக் MC, மமக மாவட்ட செயலாளர் மல்லிபட்டினம் பஹத், தமுமுக மமக மாவட்ட பொருளாளர் பட்டுக்கோட்டை ஜெகபர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post