மல்லிப்பட்டினத்தில் கலைஞரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.!

 



தஞ்சை மாவட்டம்,சரபேந்திராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டினம் பேருந்து நிலையம் அருகே கலைஞரின் 101 வது பிறந்தநாளை திமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர்.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை கழக கொடியேற்றி அனைவரும் கொண்டாட வேண்டும் என திமுக தலைவரும்,முதலமைச்சருமான ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.இந்நிலையில் மல்லிப்பட்டினத்தில் திமுகவினர் கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கலைஞரின் பிறந்தநாளை  கொண்டாடினர்.

 கிளை அவைத் தலைவர் அப்துல் அஜீஸ் கொடியேற்றி வைத்தார்.கிளைக் கழகச் செயலாளர் மாவட்ட கழக பிரதிநிதி ஹபீப் முகமது முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாசிலாமணி, முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் சர்புதீன் , பிரதிநிதி அப்துல் மாலிக், கிளை துணைச் செயலாளர் நூருல் ஹமீது,முன்னாள் மாவட்ட பிரதிநிதி மரைக்காயர் மற்றும் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.







Post a Comment

Previous Post Next Post