தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டினம் நகர எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் 16வது ஆண்டு கட்சியின் துவக்க தினம் கொண்டாடப்பட்டது.
கட்சியின் துவக்க தினத்தையொட்டி பேருந்து நிலையம் அருகே எஸ்டிபிஐ கட்சியின் கொடியை மண்டல தலைவர் தப்ரே ஆலம் ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.மேலும் நகர தலைவர் ஜவாகீர் தலைமை வகித்தார்.இதில் நகர செயலாளர் பாவா முகைதீன்,மல்லிப்பட்டினம் ஜமாஅத் தலைவர் அல்லாப்பிச்சை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துவக்க தினத்தையொட்டி கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.இந்நிகழ்வில் நகர துணைத்தலைவர் நிஜாமுதீன்,நகர பொருளாளர் பைசல்,அதிமுக கிளை செயலாளர் அப்துல் கஃப்பார் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது அஸ்லம் மற்றும் கட்சியின் செயல்வீரர்கள் கலந்துக்கொண்டனர்.


Post a Comment