மல்லிப்பட்டினம் கடலில் மீனவர் மாயம்,தேடும் பணி தீவிரம்.!

 


மல்லிப்பட்டினம் அருகே கடலில் பைபர் படகு கவிழ்ந்து மாயமான மீனவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டினம்,கள்ளிவயல் தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோனி (42). மீனவரான இவர் நேற்று காலை பைபர் படகில் இவரோடு சேர்த்து நான்கு மீனவர்களுடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். அப்போது கடல் அலைகளின் சீற்றம்,காற்றின் வேகமும் அதிகமாக இருந்துள்ளது. கடற்கரையில் இருந்து  தொலைவு சென்றபோது, பைபர் படகு நிலைத்தடுமாறி கடலில் கவிழ்ந்துவிட்டது.

இதனால் கடலில் மூழ்கி தத்தளித்த  மூன்று மீனவர்களை மட்டும் சக மீனவர்கள்  மீட்டனர். ஆனால் அந்தோனி என்ன ஆனார் என தெரியவில்லை. அவரை சக மீனவர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் மல்லிப்பட்டினத்தில் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர், காவல்துறையினர் மற்றும் கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதன் காரணமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான மீனவரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.



Post a Comment

Previous Post Next Post