தஞ்சை மாவட்டம் அரவிந்தராஜ பட்டணம் ஊராட்சி மல்லிப்பட்டினத்தில் புதிய டிரான்ஸ்பார்ம் அமைக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக மல்லிபட்டினம் காசிம் அப்பா தெரு, காயிதேமில்லத் நகர் போன்ற பல பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்விசிறிகள்,விளக்குகள் சரிவர இயங்காத காரணத்தினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதனை கருத்தில் கொண்டு மின்னகத்தின் வாயிலாக அப்பகுதி மக்கள் பல்வேறு புகார்களை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் மின்சார வாரியம் உடனடியாக துரிதமாக செயல்பட்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிரே இருந்த பழைய 100 கிலோ வோல்ட் மின்மாற்றியை மாற்றி விட்டு புதிய 100 கிலோ வோல்ட் மின்மாற்றி பொருத்தி செயல்படுத்தினார்.உதவி செயற் மின்பொறியாளர் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்றன.






Post a Comment