பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும், மதுக்கூரில் புதிய மதுக்கடை எதிர்ப்பு தெரிவித்தும் - மமக ஆர்ப்பாட்டம்..!

 


மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் இன்று காலை 11:00 மணியளவில் மதுக்கூர் முக்கூட்டுச்சாலை மாவட்ட தலைவர் மதுக்கூர் ஃபவாஸ் தலைமையில் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் நசுரூதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்,தமுமுக மாவட்ட செயலாளர் அதிரை அப்துல் மாலிக், மமக மாவட்ட செயலாளர் மல்லி பஹ்த், மாவட்ட பொருளாளர் பட்டுக்கோட்டை ஜெகபர் அலி,மாவட்ட துனை செயலாளர் Er.இலியாஸ்,அதிரை நைனா, புரோஸ்கான், சாகுல் ஹமீது, மாவட்ட துனை தலைவர் அதிரை இத்ரீஸ், மத்திய மாவட்ட தலைவர் வல்லம் மஜித், பேரூர் கழக தலைவர் ராசிக் அகமது, பேரூர் கழக செயலாளர் ஜெகபர் அலி, பேரூர் கழக பொருளாளர் முகமது சேக் ராவுத்தர் மற்றும் வட்டார காங்கிரஸ், விசிக, CPI,CPM,வீர முத்தரையர் சங்கம், SDPI, ஜாமியா மஸ்ஜித், MTCT, TNTJ நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 

விசிக மண்டல் பொறுப்பாளர் சதா சிவக்குமார் மற்றும் தலைமை பிரதிநிதி மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன் கண்டன உரை நிகழ்த்தினார்கள். 

மதுக்கூரில் புதிய மதுக்கடை அமைக்கும் பட்சத்தில் முதல் நாளே முற்றுகையிட்டு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் எனவும் ஒரு காலமும் பின் வாங்காமல் போராட்டம் தொடரும் என எச்சரிக்கை விடப்பட்டது. 

பொதுமக்கள், இளைஞர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தாய்மார்கள், சகோதரிகள், வணிகர்கள், சமூக ஆர்வலர்கள் என 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு வலுவாக எதிர்ப்பை பதிவு செய்தனர்.








Post a Comment

Previous Post Next Post