மல்லிப்பட்டினம் தர்காவில் உண்டியல் திருட்டு,காவல்துறையினர் விசாரணை.!

 



தஞ்சை மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில் மல்லிப்பட்டினத்தில்  பட்டினம் கொஸ்ஸாலி தங்கள் வலியுல்லா தர்காவில் இருந்த உண்டியலை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

மல்லிப்பட்டினம் கொஸ்ஸாலி தங்கள் வலியுல்லா தர்காவில் நேற்று அதிகாலையில் தர்காவின் பக்கவாட்டு சுவர் உடைக்கப்பட்டு, தர்காவின் கதவு  உடைக்கப்பட்டு தர்காவிற்கு உள்ளே இருந்த உண்டியலை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.இதனையறிந்த மல்லிப்பட்டினம் முகைதீன் ஜூம்ஆ பள்ளி நிர்வாக தலைவர் அல்லாப்பிச்சை,செயலாளர் அப்துர் ரஹீம் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் தர்காவை சேதப்படுத்தி உண்டியல் திருடியது குறித்து புகார் மனு அளித்தனர்.

புகார் மனு அளித்த பிறகு உடனடியாக சம்பவ இடத்தை பார்வையிட்ட காவல்துறையினர் திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டனர்.




Post a Comment

Previous Post Next Post