மல்லிப்பட்டினத்தில் கடலில் காணாமல் போன மீனவர் குடும்பத்திற்கு நிவாரணமும்,ஆறுதல் கூறி மீனவர் பேரவை.!




 கடந்த மாதம் 22 ஆம் தேதி அன்று மல்லிப்பட்டினம் கள்ளி வயல் தோட்டம் கிராமத்திலிருந்து நாட்டுப்படகான பைபர் படகில்  4 மீனவர்களுடன் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர் அப்போது திடீர் என்று வீசிய சூறாவளி காற்றால் படகு கவிழ்ந்து மூன்று மீனவர்கள் அருகில் இருந்த படகில் உயிர் தப்பினர்.அதில் சென்ற அந்தோணி என்பவர் மட்டும் கடலில் விழுந்து காணாமல் போய்விட்டார். இதுவரையும் உயிருடனோ சடலமாக மீட்கப்படவில்லை. 

இதனால் அந்தோனியை இழந்து வாடும் குடும்பத்திற்கு பேரிழப்பாக இருந்து வருகிறது.இதனை கருத்தில் கொண்டு பல்வேறு தொண்டுள்ளம் கொண்டவர்கள் உதவி புரிந்து வருகின்றனர். அதில் ஒன்றாக இன்று தமிழ்நாடு மீனவர் பேரவையின் நிறுவனத் தலைவர் அன்பழகனார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு பணம் உதவியுடன் பொருள் உதவியையும் வழங்கி ஆறுதல் கூறினார்.

தமிழ்நாடு மீனவர் பேரவையின் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் துணைத் தலைவரும் தாஜுதீன், தமிழ்நாடு மீனவர் பேரவையின் மாநில துணைத்தலைவர் பிச்சைக்கண்ணு, கடலூர் மாவட்ட தலைவர் சுப்பராயன்,சென்னை மாவட்ட பேரவையின் நிருவாகிகள், இராமநாதபுரம் மாவட்ட வடக்கு தெற்கு தலைவர் கள்மற்றும் நிருவாகிகள், புதுக்கோட்டை மாவட்ட வடக்கு தெற்கு தலைவர்கள் மற்றும் நிருவாகிகள், கள்ளிவயல் தோட்ட விசைப்படகு சங்க செயலாளர் இப்ராஹிம், நாட்டுப்படகு சங்க செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், மற்றும் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் கமால் பாட்ஷா, மற்றும் முன்னாள் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ஷேக் அப்துல்லா, நாட்டுப் படகு சங்க நிர்வாகி அப்துல் சத்தார்,  நீலகண்டன் (திராவிட கழகம்) ஆகியோரும்  கலந்து கொண்டு ஆறுதல் கூறி பண உதவியும் செய்தனர். 


விரைவில் முதல்வர் நிவாரண நிதிக்கு ஏற்பாடு செய்வதுடன் மீனவர் நல வாரியத்தின் மூலம் இழப்பீட்டு தொகையான உதவித்தொகையை, அரசுக்கு எடுத்துச் சென்று உதவி செய்ய பரிந்துரை செய்வதாக மீனவர் நல வாரிய துணை தலைவர் எ.தாஜுதீன்  கூறினார்.





Post a Comment

Previous Post Next Post