தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 78வது சுதந்திர தின தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 78வது சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு ஏற்பாடுகளை தலைமையாசிரியர் செய்திருந்தார்.தலைமையாசிரியர் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.
மேலும் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளை ஊக்குவிக்கும் வண்ணம் சமுதாய நலமன்றம் சார்பில் கேடயம் வழங்கப்பட்டது.ஜமாஅத் சார்பில் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மல்லிப்பட்டினம் முகைதீன் ஜூம்ஆ பள்ளி நிர்வாகிகள், ராமர் கோவில் தெரு பஞ்சாயத்தார்கள்,சமுதாய நலமன்ற நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழுவினர்,காங்கிரஸ்,திமுக,அதிமுக உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.
Post a Comment