தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே கொள்ளுக்காட்டில் காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து இதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி.
இன்று காலை (ஆக.15) சேதுபாவாசத்திரத்தில் இருந்து கொள்ளுக்காடு நோக்கி வந்துக்கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென்று வளைத்தவுடன் திருச்சியில் இருந்து முத்துப்பேட்டை நோக்கி விரைந்து வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இருச்சக்கர வாகனத்தின் மீது மோதியது, இதில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த கடலூரை சேர்ந்த நபர் கீழே விழுந்து தலையில் பலத்த அடி ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Post a Comment