மல்லிப்பட்டினத்தில் வீடு வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் கோவி.செழியன்.!

 



தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரத்தை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் மேற்கொண்டார்.

ஜூலை 1 முதல் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுக்க வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்,வீடு வீடாக சென்று திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்து சென்று விளக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒருபகுதியாக மல்லிப்பட்டினம் பகுதிகளில் கிளை நிர்வாகிகள்  வீடுவீடாக சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர், இந்நிலையில் அமைச்சர் கோவி செழியன் மல்லிப்பட்டினம் பகுதிகளில் ஓரணியில் பிரச்சாரத்தை வீடுவீடாக சென்று மேற்கொண்டார்.மேலும் பலரும் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்வில் தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பழனிவேல்,சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார்,முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கம்,தமிழ்நாடு மீனவர் நலவாரிய துணைத்தலைவர் தாஜூதீன்,மாவட்ட மீனவரணி தலைவர் அபுதாகீர்,கிளை செயலாளரும் மாவட்ட பிரதிநிதியுமான ஹபீப் முகமது,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா மற்றும் திமுக நிர்வாகிகள் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்






Post a Comment

Previous Post Next Post