அதிரையில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்.!



எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் அதிரை நகர கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் முஹம்மது புகாரி தலைமையில் நடைபெற்றது.

 மாவட்ட செயலாளர் ரியாஸ் அஹமது அனைவரையும் வரவேற்று பேசினார். இக் கூட்டத்தை மாவட்ட பொது செயலாளர் அசாருதீன் ஒருங்கிணைத்தார். 

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை புரிந்த தஞ்சை மண்டல தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா  அரசியல் களம் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார். இந்த கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், தொகுதிகளின் கட்டமைப்பு குறித்தும் மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னெடுப்புகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பள்ளிக் குழந்தைகளுக்கும் பொது மக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் வண்ணம் சுற்றித் திரியும் தெரு நாய்களை அரசு அப்புறப் படுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ள ஆவண செய்ய வேண்டும்.

வரும் உள்ளாட்சி தேர்தலுக்காக அதிகப்படியான பூத் கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும். மற்றும் இல்லம் தோறும் கட்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

கட்சி பணிகள் மற்றும் அரசியல் நகர்வு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப் பட வேண்டும்.

இக்கூட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் துணைத் தலைவர்கள் அஹமது அஸ்லம் மற்றும் நிஜாமுதீன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எஸ்டிபிஐ கட்சியின் பட்டுக்கோட்டை சட்ட மன்ற தொகுதி தலைவர் தீன் முஹம்மது, சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் ஆசாத் பாய், செயலாளர் முஹம்மது வஹி மன்சூர், மல்லிப்பட்டினம் ஜிபி கமிட்டி தலைவர் ஜவாஹிர்  மற்றும் மதுக்கூர் ஷேக் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதில் தங்களுக்கான கட்சி ஐடி களை மண்டலத் தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா அவர்கள் மூலம் பெற்றுக் கொண்டனர். இறுதியாக மாவட்ட துணைத் தலைவர்  அஹமது அஸ்லம் நன்றி கூறினார்.




Post a Comment

Previous Post Next Post