மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் புதிய மேலாண்மைக்குழு நிர்வாகம் தேர்ந்தெடுப்பு.!

 



தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலை பள்ளி பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

மேலான்மை குழு தலைவியாக ரகுமத் நிசா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

துணைத்தலைவி தாஹிரா w/o ரஜீஸ்கான் மேலும் மேலாண்மை குழு உறுப்பினர்களாக நூருல் இஸ்லாம், ரசாலிகான்,அபுபக்கர்,இபுராகிம்,சேக் முகைதீன்,சேக் ஜலால்,தனபால்,ரகுமத்துல்லா ஆகியோர் பள்ளியின் தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில்  தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஏற்கனவே இருந்த மேலாண்மை குழு சிறப்பான பல்வேறு பணிகளை முன்னெடுத்து பள்ளிக்கு தேவையான வளர்ச்சிக்கும்,மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியது அவர்களுக்கு நம்முடைய பாராட்டுக்களும்,நன்றிகளும்.

அதே போல இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நிர்வாகமும் பள்ளிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவதிலும்,பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும், ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் சரியான இணைப்பு பலமாக இருந்திட மல்லிநியூஸ் சார்பில் வாழ்த்துக்கள்.






Post a Comment

Previous Post Next Post