சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சிகுட்ப்பட்ட பகுதிகளில் கருவேல மரங்களை அகற்ற மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை.!

 



தஞ்சை மாவட்டம்,சரபேந்திர்ராஜன்பட்டிணம் ஊராட்சிக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி சூழ்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றிட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.

கிழக்கு கடற்கரை சாலையின் ஓரங்களில் கருவேல மரங்கள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன.இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.மேலும் இதனால் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்படும் அபாய சூழல் இருந்து வருகிறது.

ஆகவே இதனை சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அகற்றி தருமாறு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாசிலாமணியிடம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் மல்லிப்பட்டினம் அப்துல் பகத் கோரிக்கை வைத்தார்.இதில் சமூகநீதி மாணவர் இயக்க கிளை செயலாளர் நசீம் உடனிருந்தார்.

Post a Comment

Previous Post Next Post