தஞ்சை மாவட்டம், சரபேந்திர்ராஜன்பட்டிணம் ஊராட்சியில் இரண்டாவது வார்டு உமறுப்புலவர் தெருவில் உள்ள மூடி அமைக்கப்படாமல் இருந்த வடிகாலை பராமரிக்கவும்,அதற்கு மூடி அமைத்திடவும் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமாரை சந்தித்து மல்லிப்பட்டினம் திமுகவினர் மனு அளித்தனர்.
மேலும் வடிகால்களை முறையாக பராமரிக்காமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது,மேலும் கொசுக்கள்,பாக்டீரியாக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவக்கூடிய அபாயம் இருந்து வருகிறது.மூடப்படாமல் இருந்ததால் நேற்று மாலை இந்த வடிகாலில் சிறுவன் தடுமாறி கீழே விழுந்து காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை கருத்தில் கொண்டு வடிகால்களை தூர்வாரி சுத்தப்படுத்தி தரவேண்டும்,கால்வாயினை மூடி வைக்க வேண்டும் என்று மல்லிப்பட்டினம் திமுக மாவட்ட கழக பிரதிநிதி மற்றும் கிளை செயலாளருமான ஹபீப் முகமது,மாவட்ட மீனவரணி தலைவர் அபுதாகீர்,கிளை துணைசெயலாளர் நூருல் ஹமீது,இளைஞரணி துணை அமைப்பாளர் சபீர் ஆகியோர் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.கோரிக்கை மனுவை பரிசீலனை செய்வதாகவும் தெரிவித்தார்.
Post a Comment