தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் உமறுப்புலவர் தெரு கழிவு நீர் வாய்க்காலில் சிறுவன் விழுந்து காலில் பலத்த காயம்.
மல்லிப்பட்டினம் உமறுப்புலவர் தெருவில் சுமார் 100மீ தூரம் கால்வாய் சாலையின் ஓரத்திலே அமைக்கப்பட்டது.இந்த கால்வாய் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது, மேலும் வாய்க்கால் மூடி அமைக்கப்படாமலே வாய்க்கால் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த பகுதியில் நடந்து வரும் போது சிறுவன் இடரி திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து காலில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஏற்கனவே இந்த திறந்த நிலை வாய்க்கால் முறையாக பராமரிக்கப்படாமல் கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது, பாதசாரிகள் கடக்கும் போதும் தவறி அதில் கீழே விழும் சூழலும் இருந்து வருவதை கருத்தில் கொண்டு அதனை சரிசெய்திட அப்பகுதி மக்கள் ஏற்கனவே மக்களுடன் முதல்வர் முகாமில் கோரிக்கை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊராட்சி நிர்வாகம் உடனடியாக வாய்க்காலை சுத்தப்படுத்தி, அதனை கான்கீரிட் மூடி அமைத்திடும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
Post a Comment