வேதாரண்யத்தில் 50 மீட்டர் உள்வாங்கிய கடல்..!

 



வேதாரண்யம்  கடல் 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கி  காணப்படுகிறது. வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவான நிலையில் வேதாரண்யம் சன்னதி கடல் பகுதியில் 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கி கடற்களிமண் வெளியேறி கடற்கரை முழுவதும் சேரும் சகதியுமாக காணப்படுகிறது.  அதே நேரத்தில் கடல் அமைதியாகவும் பலத்த காற்றும் வீசி வருகிறது கடல் அமைதியாகவும் வழக்கத்துக்கு மாறாக கடல் உள் வாங்கி உள்ளதால் இது புயலுக்கான அறிகுறி என மீனவர்கள் அச்சம்  தெரிவித்துள்ளனர்

நாகை மாவட்டத்தில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ள நிலையில் நேற்று இரவு முதல் வேதாரண்யம் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது

Post a Comment

Previous Post Next Post