மல்லிப்பட்டினம் வடிகால்களில் குப்பை கொட்டுவதால் தேங்கி நிற்கும் மழை நீர்.!

 



தஞ்சை மாவட்டம்,சரபேந்திராஜன் பட்டினம் ஊராட்சி மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய  பகுதிகளில் உள்ள வடிகால்களில் வெளியேறும் மழைநீர் கட்டையா பாலம் சென்று கடலுக்குள் கலக்கிறது, குப்பைகள் சூழ்ந்து காணப்படுவதால்  மழைநீர் வெளியேறாமல் இருக்கிறது.

வீடுகளில் உள்ள மரக்கழிவுகள்,பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் இன்ன பிற கழிவுகளை சாலையில் உள்ள மழைநீர் வடிகால்களில் பொதுமக்கள் கொட்டுவதால்










குப்பைகளின் அடைப்பால் மழை நீர் வெளியேறாமல் கழிவுநீருடன் தேங்கி நிற்கிறது.வடிகால்களும் தூர்வாரப்படாமலே இருக்கிறது.

ஏற்கனவே டெல்டா மாவட்டங்களுக்கு அதீத கனமழை எச்சரிக்கை அறிவித்துள்ள நிலையில் ஊராட்சி நிர்வாகம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வடிகால்களை போர்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கையாக தூர்வாரிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மழைநீர் வாய்க்கால்கள் மற்றும் சாக்கடை நீர்வடிகாலில் பொதுமக்கள் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்களை போட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.




Post a Comment

Previous Post Next Post