பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படதாதால் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தவாறு பள்ளிக்கு சென்றனர்.
பட்டுக்கோட்டை,மல்லிப்பட்டினம்,அதிராம்பட்டினம் ஆகிய பகுதிகளில் இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் மழை தொடர்ந்து பெய்தது. மழை காரணமாக இன்று விடுமுறை விடப்படும் என்று மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். மேலும் பள்ளி வழக்கம்போல் செயல்படும் என ஒருசில பள்ளிகளில் இருந்து மாணவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.
அதைத்தொடர்ந்து மாணவர்கள் வேக, வேகமாக பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால், காலை 8 மணிக்கு மேல் மழையின் வேகம் அதிகரித்தது. பலத்த மழையாக பெய்ததால் மாணவ- மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர். பலர் மழையில் நனைந்தபடியும், சில மாணவர்கள் ஆட்டோவிலும் சென்றனர். சில பெற்றோர் தங்களது குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் மழையில் நனைந்தவாறே பள்ளிக்கு அழைத்து சென்றனர்.
மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே விடுமுறை குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம் என்று உத்தரவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment