மல்லிப்பட்டினம் ஆசிரியர் கொலைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்...!



மல்லிப்பட்டினத்தில் நடந்த ஆசிரியர் கொலைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மல்லிப்பட்டினம் பஷீர் அவர்கள் கண்டனம் :

மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து இடைநிலை ஆசிரியர் கத்தியால் குத்தப்பட்டு மரணம் அடைந்த செய்தி கேட்ட மிக வேதனையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

அந்த ஆசிரியரை இழந்து வாடும் குடும்பத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக வருத்தத்தை தெரிவித்துக் கொண்டும, இந்த குற்றச் செயலலி ஈடுபட்ட நபரை கடுமையான சட்டத்தில் தண்டிக்க வேண்டும் எனவும், 

மேலும் இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், இப்பள்ளியில் சிசிடி கேமரா பொருத்த வேண்டும் எனவும், பள்ளி உன் வளாகத்தில் செல்லும்பொழுது உரிய அனுமதி பெற்று செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட கல்வித்துறையும், மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அவர்களையும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களையும், உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

- தஞ்சை தெற்கு மாவட்டம் மாவட்ட செயலாளர் மல்லிப்பட்டினம் பஷீர்

Post a Comment

Previous Post Next Post