தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் காசிம் அப்பா தெருவில் உள்ள குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழை நீரை சட்டமன்ற உறுப்பினர் உத்தரவின்பேரில் மோட்டார் கொண்டு வெளியேற்றப்பட்டு வருகிறது.
நேற்று(நவ.28) காசிம் அப்பா தெருவில் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதை நேரில் பார்வையிட்டார், அப்போது அப்பகுதி மக்கள் மழைநீரை மோட்டார் உதவிகொண்டு வெளியேற்ற ஏற்பாடு செய்ய கோரிக்கை வைத்தனர்.அதனை கேட்ட சட்டமன்ற உறுப்பினர் செய்து தருவதற்கு உறுதியளித்தார், திமுக கிளை செயலாளரும்,மாவட்ட பிரதிநிதியுமான ஹபீப் முகமதிடம் அறிவுறுத்தினார்.
அதனடிப்படையில் மோட்டார் கொண்டு காசிம் அப்பா தெரு வாசிகளின் உதவியோடு மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செய்து கொடுத்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றினை தெரிவித்துக் கொண்டனர்.
Post a Comment