மல்லி நியூஸ் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மக்களுக்கு தேவையான அடிப்படைகளை அரச அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஓங்கி ஒலிக்கும் வண்ணம் தொடர்ந்து குரலெழுப்பி வருகிறது.
அந்த வகையில் விருப்பு,வெறுப்பின்றி செய்தியினை வெளியிட்டு வருகிறோம்,எந்தவித சுயலாப நோக்கமின்றி இதுநாள்வரை செயல்பட்டு வருகிறோம் என்பது யாவரும் அறிந்ததே.
மல்லிப்பட்டினம் காயிதே மில்லத் நகர் வாஹிது சாலையில் 50மீ சாலை போடப்படாமலே இருந்தது, இதனால் பொதுமக்கள், பள்ளி செல்லும்,மாணவர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தே வந்தனர்.இதனை ஒவ்வொரு முறையும் செய்தியாக வெளியிட்டு இன்று சாலை அமைவதற்கு மல்லி நியூஸும் ஒரு காரணம் என்பது பெரும் மகிழ்ச்சியையும்,நிம்மதியையும்,அடுத்தடுத்த செய்ய வேண்டிய உந்துதலையும் தருகிறது.
மேலும் மக்களுடைய அடிப்படை பிரச்சனைகளை பொதுவெளியில் கொண்டு வந்து அதை அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர மல்லி நியூஸ் ஊடகம் முக்கிய பங்காற்றி வருகிறது எனவும் குறிப்பிட்டு இருந்தனர்.
இந்நிலையில் புதியதாக போடப்பட்ட 50மீட்டர் சாலையை அமைத்து கொடுக்க உதவியாக இருந்த மல்லி நியூஸ் ஊடகத்திற்கு நன்றி தெரிவித்து அரசுக்கும் மக்களுக்கும் இணைப்பு பாலமாக இருந்துவரும் நம்மை அங்கீகரிக்கும் வண்ணம் சால்வை அணிவித்து அப்பகுதி மக்கள் சார்பில் நினைவு கேடயம் வழங்கினார்கள்.
Post a Comment