மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் வெளியூர்,வெளிமாவட்ட மீன்கள் விற்கப்படுவதால் உள்ளூர் மீனவர்கள் வேதனை..!





தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் வெளியூர் மற்றும் வெளி மாவட்ட மீன்கள் அதிகமாக விற்கப்படுவதால் நாட்டுபடகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் விற்கப்படாமலே தேங்கி விடுவதால் மீனவர்கள் வேதனையடைந்துள்ளனர்.

மல்லிப்பட்டினம் மற்றும் கள்ளிவயல் தோட்டத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும்,150க்கும் மேற்பட்ட நாட்டுபடகுகளில் மீனவர்கள் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு ஞாயிறு,செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் விசைபடகுகளும்,மற்ற நாட்களில் நாட்டுபடகு மீனவர்களும் துறைமுகத்தில் மீன்களை விற்பனை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே மீனவர்கள் டீசல் உயர்வு,மீன்களின் வரத்து குறைவு மற்றும் மீன்களுக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே துறைமுக மேலாண்மை கமிட்டி எச்சரித்தும் வெளியூர் மற்றும் வெளிமாவட்ட மீன்களும் துறைமுகத்தில் மீன்கள் விற்பனை செய்யும் இடத்தில் விற்கப்படுவதால் மல்லிப்பட்டினம் மற்றும் கள்ளிவயல் தோட்ட மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் தேங்கி விடுவதாலும்,விலை இல்லாமல் இருப்பதால் மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.

ஆகவே வெளிமாவட்ட,வெளியூர் மீன்கள் விற்பனை செய்யப்படுவதை மீன்வளத்துறை மற்றும் துறைமுக மேலாண்மை கமிட்டி தடுத்திட வேண்டும் என்றும் வாகனங்கள் செல்ல வழியில்லாமல் பாதையை மறித்து மீன்கள் விற்பதையும் தடுத்திட வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.

Post a Comment

Previous Post Next Post