மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவை விமர்சித்து பேசிய பாஜகவை சேர்ந்த எச்.ராஜாவின் மீது
அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டது.
முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்தும்,காஷ்மீர் மக்கள் குறித்தும் புனைவு பேசியும் வெளியிட்டுள்ள அமரன் படம் குறித்து கண்டனம் தெரிவித்த ஜவாஹிருல்லாவை சட்டமன்ற உறுப்பினர் என்றும் பாராமல் தரக்குறைவாகவும் எச்.ராஜா பேசி இருந்தார்.
தமிழக அரசே காவல் துறையே துரித நடவடிக்கை எடுத்து எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும், அமைதியாக உள்ள தமிழகத்தில் சமூக பதற்றத்தை ஏற்படுத்தி அதன் மூலம் குளிர்காய நினைக்கும் இதுபோன்ற வன்முறைவாதிகளை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தனர்.
அதெல்லாம் ஒரு ஆனியும் புடுங்க முடியாது மொதல்ல நம்ம ஒற்றுமையாக இருக்க முயற்சி எடுப்போம்
ReplyDeletePost a Comment