தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமாரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
காசிம் அப்பா தெருவில் குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள மழைநீரை மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றுவதற்கும், சாலைகளில் தேங்கி இருந்த மழை நீரை அகற்றி அதில் சிமெண்ட்,ஜெல்லி ஆகியவற்றை வைத்து தற்காலிகமாக சரிசெய்ய சட்டமன்ற உத்தரவிட்டு இருந்தார்.
அதனடிப்படையில் ஐந்து நாட்கள் மோட்டார் மூலம் மழைநீர் அகற்றப்பட்டது.அதற்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் மல்லிப்பட்டினம் கிளை செயலாளரும் மாவட்ட பிரதிநிதியுமான ஹபீப் முகமது தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமாரை சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.இதில் மல்லிப்பட்டினம் ஜமாஅத் செயலாளர் அப்துர் ரஹீம மற்றும் ஹாஜா ஆகியோர் கலந்துக்கொண்டனர்
Post a Comment