மல்லிப்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சி ஆலோசனை கூட்டம்.!



 எஸ்டிபிஐ கட்சி மல்லிப்பட்டினம்  கிராம பஞ்சாயத்து கமிட்டி ஆலோசனை கூட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றிய அலுவலகத்தில் கமிட்டி தலைவர் ஜவாஹீர் தலைமையில் நடைபெற்றது.

கமிட்டி செயலாளர் பைசல் வரவேற்புரையாற்றினார்.சிறப்பு விருந்தனராக சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் ரியாஸ் அகமது சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் தகர்ப்பு நாளில் மல்லிப்பட்டினம் முகைதீன் ஜூம்ஆ பள்ளி அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.மேலும் கிராம பஞ்சாயத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக கமிட்டி துணைதலைவர் ரபீக் நன்றியுரையாற்றினார்.

Gpகமிட்டி, கிளை1 மற்றும் கிளை 2 நிர்வாகிகள்  கலந்துக் கொண்டனர்.






Post a Comment

Previous Post Next Post